கைக்குண்டுடன் இராணுவச் சிப்பாய் கைது
கொழும்புக்கு அருகே நடைபெற்ற பொலிஸ் சோதனை நடவடிக்கையொன்றின் போது கைக்குண்டு ஒன்றுடன் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்புக்கு அருகே கடவத்தைப் பிரதேசத்தில் மஹகடே சந்தியில் இன்று(11) காலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இராணுவச் சிப்பாய் கைது
முச்சக்கர வண்டியொன்றை நிறுத்தி பொலிஸார் சோதனையிட்ட போது அதற்குள் இருந்தவர்களிடம் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோணஹேன, கடவத்தை, எல்பிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இராணுவச் சிப்பாய் ஒருவரும் உள்ளடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
