பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் பதற்றம் - பொலிஸார் துப்பாக்கி சூடு
பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் பொலிஸாருக்கும் பௌத்த கொடிகளை தொங்கவிட்ட ஒரு குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, பொலிஸார் தாக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரை தாக்கியதாக கூறப்படும் குழுவை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய 4 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் மீது தாக்குதல்
பேருவளை துறைமுகத்திற்கு அருகில் லொறி ஒன்றின் மீது ஏறி பௌத்த கொடிகளை தொங்கவிட்ட ஒரு குழுவினரிடம் வீதியை மறிக்க வேண்டாம் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அது மோதலாக மாறிய நிலையில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
துப்பாக்கி சூடு
அந்தக் குழுவைக் கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி 2 முறை சுட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
தாக்குதலுக்கான பொலிஸ் அதிகாரி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam
