விவசாயிகளுக்கு காப்புறுதி வழங்க தீர்மானம்: மகிந்தானந்த அளுத்கமகே (Photos)
கடந்த பெரும் போக வேளாண்மைச் செய்கையில் இலங்கை பூராகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்புறுதி வழங்குவது தொடர்பான இறுதி தீர்மானத்தினை மேற்கொள்ளும் விவசாய அமைச்சின் ஆலோசனைச் சபையின் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தலைமையில் நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் கடந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மிக விரைவாக குறித்த இழப்பீட்டு காப்புறுதியினை வழங்க வேண்டுமென குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின் தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கேட்டுகொண்டுள்ளார்.
அதற்கு அமைவாக கலந்துரையாடலின் போது மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டிற்கான காப்புறுதியாக முற்றாக பாதிக்கப்பட்ட வயல்களுக்கு ஏக்கரிற்கு நாற்பதாயிரம் தொடக்கம் இழப்பீட்டினையும், ஏனைய பகுதியளவில் பாதிக்கப்பட்ட வயல்களுக்கு பாதிப்பின் வகைக்கேற்ப இழப்பீட்டு காப்புறுதியினையும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திகதி முதல் இழப்பீட்டு காப்புறுதியினை வழங்குவதற்கான ஏற்பாட்டினை மேற்கொள்வதாக விவசாய அமைச்சர் வாக்குறுதியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறித்த விவசாயிகளுக்கான இழப்பீட்டு காப்புறுதியினை எதிர்வரும் 28ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டபத்தடி, ஆயித்தியமலை, கரடியனாறு மற்றும் ஏறாவூர் ஆகிய நான்கு பகுதிகளில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை முதல்கட்டமாக வழங்கி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கடந்த வருடங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குள் இதுவரை இழப்பீட்டு காப்புறுதிகள் கிடைக்கப் பெறாத விவசாயிகளுக்கும் தனது வேண்டுகோளுக்கு அமைவாக மிக விரைவாக இழப்பீட்டு காப்புறுதி வழங்கப்படும் என விவசாய அமைச்சர் வாக்குறுதியளித்துள்ளதாக இக்கூட்டத்தின் நிறைவில் இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட
விவசாயிகளுக்கு எதிர்வரும் 10.03.2022 இற்கு முன்னர் காப்புறுதிப் பணம்
வழங்கப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட
அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் நேற்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 3 மணி நேரம் முன்
லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam