ஒருவரை தாக்குவதன் மூலம் ஒழுக்கத்தை உறுதிப்படுத்த முடியாது என்று கூறும் பிரதமர்
இயேசு கிறிஸ்து தன்னை சிலுவையில் அறைந்தவர்களை கூட வெறுக்காமல் உலகிற்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்தார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கேகாலை புனித மரியாள் கல்லூரியில் இன்று நடைபெற்ற அரச கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின்போது காணொளி இணைப்பின் ஊடாக பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், ஒவ்வொரு மதமும் அமைதியை ஊக்குவிக்கிறது, வெறுப்பை அல்ல என்று குறிப்பி்ட்டார்.
சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னர் இயேசு கிறிஸ்துவின் கடைசி வார்த்தைகளை அவர் நினைவு கூர்ந்தார்,
அதன்போது அவர் தன்னைக் கொன்றவர்களை மன்னித்தார். என்று மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.
சமூகத்தில் ஒழுக்கத்தை உறுதி செய்வதில் மதம் பெரும் பங்கு வகிக்கிறது
இந்தநிலையில் யாரையும் வாய்மொழியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ தாக்குவதன் மூலம் ஒழுக்கத்தை உறுதிப்படுத்த முடியாது என்றும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்