மீண்டுமொரு யுத்தம் ஏற்படுமா.. மகிந்தவின் சூசகமான எச்சரிக்கை
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இன்னுமொரு யுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும், எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்றும் மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நாட்டில் நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததை எண்ணி நான் தற்போதும் மகிழ்ச்சி அடைகின்றேன். மேலும், அதனை நான் எனது அதிஷ்டமாக கருதுகின்றேன்.
யுத்தம் ஏற்பட வாய்ப்பில்லை
அப்போது என்னுடன் சிறந்த அமைச்சர்களும் சிறந்த இராணுவத் தளபதிகளும் உடனிருந்தனர். அதனாலேயே எங்களால் போரை வெற்றிகொள்ள முடிந்தது.

தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் இன்னுமொரு யுத்தம் ஏற்பட வாய்ப்பில்லை. எனினும், எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 22 மணி நேரம் முன்
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam