மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசிடம் மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள கோரிக்கை
இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
நேரடியான மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டிய அவசியம்
"மக்கள் பிரதிநிதித்துவம் இன்றி மாகாண சபைகள் சிறந்த முறையில் இயங்குவதாக சிலர் வாதிட்டாலும், அது யதார்த்தமானது அல்ல. அரச அதிகாரிகள் நிர்வாகத்தை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு மக்களுக்கு நேரடியாக பொறுப்பு கூற வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை என்பதால், மாகாண சபைகளுக்கு நேரடியான மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

மக்களின் பிரதிநிதித்துவம் இன்றி மாகாண சபைகள் இயங்குவது ஒரு குற்றமாகும். மாகாண சபை தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தினால், எதிர்காலத்தில் நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என அனைத்து நிறுவனங்களையும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி இயக்க முடியும் என்ற ஆபத்தான நிலையை அது உருவாக்கும்.
எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி உலக ஜனநாயக தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அன்றைய தினமாவது அரசு மாகாண சபைத் தேர்தலை எப்போது, எந்த முறையில் நடத்தப் போகின்றது என்பதை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும்." என்றார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 20 மணி நேரம் முன்
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam