வாடகை வீட்டில் தங்கியுள்ள மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது கொழும்பில் வாடகை வீட்டில் தங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவர் நுகேகொட பகுதியில் உள்ள அவரின் நெருங்கிய நண்பருக்குச் சொந்தமான வீட்டில் தங்கி வருவதாக கூறப்பட்டுள்ளது.
வாடகை வீடு
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான அரசின் அதிகாரப்பூர்வ இல்ல வசதி இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விஜயராம அதிகாரப்பூர்வ இல்லத்தில் வசித்து வந்த மகிந்த ராஜபக்ச செப்டம்பர் 11ஆம் திகதி அந்த இல்லத்தை விட்டு வெளியேறினார்.

அதன்பின்னர் அவர் தங்கல்லை – காரலியவில பகுதியில் உள்ள தனது வீட்டில் சில காலம் தங்கியிருந்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் நுகேகொட பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.
அரசியல் நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகளை எளிதாக பெறும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வீடு அவரின் நெருங்கிய நண்பருக்குச் சொந்தமானதாகவும், வாடகை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri