பதவிக் காலத்தின் இறுதியில் மகிந்த எடுத்த தவறான தீர்மானங்கள்! வரலாற்று நாயகன் என புகழாரம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு வரலாற்று நாயகன். லீ குவான் யூ, மகாதீர் முகமது, நரேந்திர மோடி போன்ற தலைவர்களைப் போன்று விளங்க வேண்டிய ஒருவர் என்று முன்னாள் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஆயுதப் போரில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து, அதற்குத் தலைமைத்துவம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிறந்தநாள் கடந்த வாரம் கொண்டாடப்பட்டது.
வரலாற்று நாயகன்
அப்போது நான் அவரிடம் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டேன். நீங்கள், நாட்டின் மீது அக்கறைக் கொண்ட ஒரு வரலாற்று நாயகன். லீ குவான் யூ, மகாதீர் முகமது, நரேந்திர மோடி போன்ற தலைவர்களைப் போன்று விளங்க வேண்டிய ஒருவர்.
ஆனால், ஆட்சியின் இறுதிக்காலத்தில் நீங்கள் எடுத்த தவறான தீர்மானங்களால் அது சாத்தியமாகவில்லை.

எனினும், உலக வரலாற்றில் பயங்கரவாத அமைப்பாகக் கருதப்பட்ட ஒரு அமைப்பை மகிந்த ராஜபக்ச தலைமையில் தோற்கடித்துள்ளோம்.
இருப்பினும், கருத்தியல் ரீதியாக அவர்கள் இன்னமும் நாட்டின் பல்வேறு இடங்களில் செயற்பட்டு வருகின்றனர் என்பதை நாம் அறிவோம்.
அவ்வாறான நிலையில், தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில் அலட்சியமாகச் செயற்படுவதுடன், இத்தகையை கருத்தியல்கள் வளர்ச்சியடைவதற்குத் தேவையான சூழலையும் உருவாக்கிக் கொடுக்கின்றது என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.
எனவே, இந்த விடயத்தில் நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri