மகிந்த ராஜபக்சவின் மேலும் ஒரு மோசடி நீதிமன்றத்தில் அம்பலமானது!
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் மூப்புப் பட்டியலில் 300- 400 ஆவது இடங்களுக்கும் அப்பால் இருந்த மூவரைத் தேர்ந்தெடுத்து அமைச்சரவை பத்திரம் மூலம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு 10-16 ஆண்டுகளுக்கு பின்னர் குறித்த பதவி உயர்வுகளை உயர் நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது.
இந்த அடிப்படை உரிமை மனு 2010 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அடிப்படை உரிமை மனுவில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றும் 33 பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டவர்கள்
156 பேரைப் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் முதன்மைப் பிரதிவாதிகளாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அமைச்சரவை சட்டமா அதிபர் மற்றும் இந்த சிறப்புப் பதவி உயர்வுகளைப் பெற்ற மூவர் பெயரிடப்பட்டிருந்தனர்.
இங்கு சவாலுக்கு உட்படுத்தப்பட்டது என்னவென்றால் பிரதான பொலிஸ் பரிசோதகர்களான பி. கிரிஷான்தஇ பி.ஜி.எஸ். குணதிலக்க மற்றும் ஜி.எம். பிரஷாந்த பெரேரா ஆகிய மூவரையும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக உயர்த்துவதற்கு அமைச்சரவை எடுத்த சிறப்புத் தீர்மானமாகும்.

பொதுவாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளபடி அக்காலத்தில் பிரதான பொலிஸ் பரிசோதகர்களில் இருந்து உதவி பொலிஸ் அத்தியட்சகர்களைப் புள்ளியிடும் -தேர்ந்தெடுக்கும் சில முறைகள் இருந்தன.
திறந்த போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை மூலம் சுமார் 125 வெற்றிடங்கள் நிரப்பப்படும். (பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்).வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை மூலம் மேலும் 125 வெற்றிடங்கள் நிரப்பப்படும். (தகுதியுள்ள பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்).
அடிப்படை தகுதிகள்
திறமை மற்றும் மூப்பு அடிப்படையில் நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு பிரதான பொலிஸ் பரிசோதகர்களில் இருந்து எஞ்சிய வெற்றிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு நடைமுறைகள் இருக்கத்தக்கதாக மூப்புப் பட்டியலைக்கூடக் கவனத்தில் கொள்ளாமல் 2010 ஆம் ஆண்டில் மூப்புப் பட்டியலில் 300- 400 ஆம் இடங்களுக்கும் அப்பால் மிகத் தொலைவில் இருந்த மூவரைத் தேர்ந்தெடுத்து அமைச்சரவை பத்திரம் மூலம் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்காக அன்றைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த மகிந்த ராஜபக்சவினால் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பி. கிரிஷான்த பெலியத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்தவர்.
இவர் மஹிந்த ராஜபக்சவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளித்தார் என்பதற்காகவும் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த நபர் - பி.ஜி.எஸ். குணதிலக்க 2004.05.20 அன்று பிரதமர் பாதுகாப்புப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் முக்கிய பதவியை வகித்தவர்.
மூன்றாவது நபர் - ஜி.எம். பிரஷாந்த பெரேரா 2004.05.20 முதல் அலரி மாளிகையின் அதிஉயர் பாதுகாப்பு வலையத்தின் கடமையாற்றியுள்ளார்.இவையே அவர்களின் பதவி உயர்வுக்கு தகுதிகளாக கணிப்பிடப்பட்டுள்ளன.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது பதியின் அதிகாரத்தை பயன்படுத்தியே இந்த பதிவியுர்வுகளை வழங்கியுள்ளதாக வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.