கோட்டாபய ராஜபக்சவுக்கும் தண்டனை கோரும் அருட்தந்தை! சலே மீது நம்பிக்கையற்ற நிலை
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபையின் தேசிய ஊடகத் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய ஒரு தரப்பினருக்கு எதிராக தண்டனை விதிக்கப்பட்டு நேற்றையதினம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்குகளில் திருப்திகரமான தீர்ப்புகளை எதிர்பார்கின்றோம்! கத்தோலிக்க திருச்சபை
கோட்டாபய மற்றும் சுரேஷ் சலே என்ன ஆனார்கள்..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்சவும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விவகாரம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய ஒரு நபராக தற்போது மாறியுள்ளார்.

எனவே, இந்த சந்தேகத்தை நிவர்த்திக்க கோட்டாபய தவறுவாராயின் அவருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கான வாய்ப்பு, புலனாய்வுப் பிரிவினருக்கு இருந்தபோதிலும், ஏதோ ஒரு மறைமுக சக்தியின் வழிநடத்தலின் கீழ் அந்த தாக்குதல் இடம்பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னணியில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் திட்டம் இருந்தமை தெளிவாகின்றது.

எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான நோக்கத்தையும் ஒன்றிணைத்த உண்மையான சூத்திரதாரி யார் என்பதை விரைவாக கண்டறிய வேண்டும்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே இத்தனை நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் அளவுக்கு கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருப்பார் என்று நான் நம்பவில்லை.
ஆகவே, வைத்தியர்களிடம் இருந்து உண்மையான தகவல்களைப் பெற்று சுரேஷ் சலேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து நியாயமான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலாடையின்றி 115 மைல் வேகத்தில் ரேஞ்ச் ரோவரில் பறந்த நபர்: சினிமா பாணியில் சிக்கிய சம்பவம் News Lankasri
கனடாவில் உயர்ந்த சம்பள வேலையை விட்டு, பெற்றோருக்காக நாடு திரும்பும் இந்திய வம்சாவளி பெண் News Lankasri