உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : பேராயர் மெல்கம் ரஞ்சித்தின் நெகிழ்ச்சியான பதிவு..
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 9 பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் ஆயத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில் மொத்தம் 24 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இச் சம்பவம் தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித் வலையொழி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரித்த கருத்துக்கள்
அநீதியை அநியாயமாக மறைத்தல்
இந்த சம்பவம் தொடர்பில் உண்மையைத் தெரிந்து கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை இங்கு மன்னிப்பதும் மற்றவர்களைக் கருணையோடு நடத்துவதும் வேறு விடயம். ஆனால் அநீதியையும் அநியாயத்தையும் மறைக்கவோ உண்மையை மறைக்கவோ அனுமதிக்க முடியாது.
யார் இதைச் செய்தார்கள்? இது எப்படி நடந்தது? என்பதைத் தெரிந்து கொள்ளும் நியாயமான உரிமை அனைவருக்கும் இருக்கிறதுஇ குறிப்பாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கிறது.
அப்படியானால் பாதிக்கப்பட்ட தரப்பு என்பது கட்டுவாபிட்டிய மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களில் உயிர்களை இழந்தவர்கள் ஊனமுற்றவர்கள் மட்டுமல்ல. நாம் அனைவருமேதான்.

ஏனெனில் அந்த நேரத்தில் இந்த அப்பாவி மக்களின் உயிர்களைப் பற்றி நம் அனைவருக்கும் பெரும் சோகம் ஏற்பட்டது. அந்த வலி சகோதரத்துவத்துடன் நம் அனைவருக்கும் உணரக்கூடிய ஒன்று.
எனவே இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் என்ன இருந்தது? யார் இதைச் செய்தார்கள்? என்பதைத் தெரிந்து கொள்வது நமது உரிமை. ஆனால் மன்னிப்பது நமது பொறுப்பு நமது கடமை.
பாதிக்கப்பட்ட ஏதோ ஒரு நோய் வந்தோ அல்லது ஏதேனும் நியாயமான காரணத்தினhல் இறந்தவர்கள் இல்லையே. திடீரென்று காலையில் தேவாலயத்திற்குச் சென்றார்கள் திரும்பி வரவில்லை.
அல்லது ஊனமுற்றவர்களாகி வாழ்நாள் முழுவதும் துயரப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். படுக்கையிலோ சக்கர நாற்காலியிலோ முடங்கிப்போனார்கள். எனவே அவர்களின் மனதிற்குள் இந்த வலி இருக்கிறது.
உண்மையை தெரிந்து கொள்ளும் உரிமை
யார் நமக்கு இதைச் செய்தார்கள்? ஏன் நமக்கு இப்படி ஒரு காரியத்தைச் செய்தார்கள்? அந்த உண்மையைத் தெரிந்து கொள்ளும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது அந்த உரிமை நம் அனைவருக்கும் இருக்கிறது.
ஆம் முழுச் சமூகத்திற்குமே இருக்கிறது. இதுபோன்ற ஒரு காரியத்தைச் செய்துவிட்டு நாம் எப்படிச் சும்மா இருப்பது? இதை ஆராய வேண்டும் உண்மையைக் கண்டறிய வேண்டும். அதன் பிறகு யாராவது ஒருவர் தனது தவறை ஒப்புக் கொண்டால்இ மன்னிக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது.
உதாரணமாக நெல்சன் மண்டேலாவை சிறையில் அடைத்து அவரைச் சித்திரவதை செய்த ஒரு பொலிஸ் அதிகாரி அவரிடம் வந்து மன்னிப்புக் கேட்டார். அப்போது அவர் மன்னித்தார். அதுதான் மன்னிப்பு.

'ஆம் என் கையால் இப்படி ஒரு தவறு நடந்துவிட்டது என்னை யார் இயக்கியது என்று எனக்கு சரியாகத் தெரியாது ஆனால் நான் இப்படி ஒரு தவறு செய்துவிட்டேன் அது குறித்து நான் வருந்துகிறேன்' என்று தனது தவற்றை ஒப்புக் கொண்டால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு மன்னிப்பு வழங்கத் தயாராக இருக்க வேண்டும்.
எனவே இது தீர்க்கப்படக் கூடிய ஒரு பிரச்சினை. ஆனால் இதை அரசியல்மயமாக்கி கட்சி அரசியல் உள்ளே வந்து இதை அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான ஒரு கலவரமாக மாற்றி எல்லாரும் நாடகம் ஆடுகிறார்கள்.
நமக்கு இவை எதுவும் தேவையில்லை. நமக்குத் தேவைப்பட்டது: யார் இந்த அழிவைச் செய்தது? 273 பேரின் விலைமதிப்பற்ற உயிர்களைப் பறித்தது யார்? அதைச் சொல்லுங்கள்.
அதை ஒப்புக்கொள்ளுங்கள் 'ஆம் நாங்கள் ஒரு முட்டாள்தனம் செய்துவிட்டோம் நாங்கள் தவறு செய்துவிட்டோம்' என்று ஒப்புக்கொள்ளுங்கள். அப்போது எங்களால் மன்னிக்க முடியும். மன்னிக்காமல் இருக்க முடியாது; ஏனெனில் ஆண்டவர் நமக்குச் சொன்னது அதைத்தான் 'மன்னியுங்கள்' என்று குறிப்பிட்டார்.
YOU MAY LIKE THIS..