மகிந்த ராஜபக்சவின் மேலும் ஒரு மோசடி நீதிமன்றத்தில் அம்பலமானது!

Sri Lanka Police Mahinda Rajapaksa High Court of Sri Lanka
By Kanthan Sep 23, 2026 04:45 PM GMT
Report

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் மூப்புப் பட்டியலில் 300- 400 ஆவது இடங்களுக்கும் அப்பால் இருந்த மூவரைத் தேர்ந்தெடுத்து அமைச்சரவை பத்திரம் மூலம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு 10-16 ஆண்டுகளுக்கு பின்னர் குறித்த பதவி உயர்வுகளை உயர் நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது.

இந்த அடிப்படை உரிமை மனு 2010 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அடிப்படை உரிமை மனுவில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றும் 33 பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : பேராயர் மெல்கம் ரஞ்சித்தின் நெகிழ்ச்சியான பதிவு..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : பேராயர் மெல்கம் ரஞ்சித்தின் நெகிழ்ச்சியான பதிவு..

பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டவர்கள்

156 பேரைப் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் முதன்மைப் பிரதிவாதிகளாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அமைச்சரவை சட்டமா அதிபர் மற்றும் இந்த சிறப்புப் பதவி உயர்வுகளைப் பெற்ற மூவர் பெயரிடப்பட்டிருந்தனர்.

இங்கு சவாலுக்கு உட்படுத்தப்பட்டது என்னவென்றால் பிரதான பொலிஸ் பரிசோதகர்களான கிரிஷாந்தஜீ பி.ஜி.எஸ். குணதிலக்க மற்றும் ஜி.எம். பிரஷாந்த பெரேரா ஆகிய மூவரையும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக உயர்த்துவதற்கு அமைச்சரவை எடுத்த சிறப்புத் தீர்மானமாகும்.

மகிந்த ராஜபக்சவின் மேலும் ஒரு மோசடி நீதிமன்றத்தில் அம்பலமானது! | Mahinda Rajapaksa Court Order

பொதுவாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளபடி அக்காலத்தில் பிரதான பொலிஸ் பரிசோதகர்களில் இருந்து உதவி பொலிஸ் அத்தியட்சகர்களைப் புள்ளியிடும் -தேர்ந்தெடுக்கும் சில முறைகள் இருந்தன.

திறந்த போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை மூலம் சுமார் 125 வெற்றிடங்கள் நிரப்பப்படும். (பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்).வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை மூலம் மேலும் 125 வெற்றிடங்கள் நிரப்பப்படும். (தகுதியுள்ள பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்).

அடிப்படை தகுதிகள்

திறமை மற்றும் மூப்பு அடிப்படையில் நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு பிரதான பொலிஸ் பரிசோதகர்களில் இருந்து எஞ்சிய வெற்றிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு நடைமுறைகள் இருக்கத்தக்கதாக மூப்புப் பட்டியலைக்கூடக் கவனத்தில் கொள்ளாமல் 2010 ஆம் ஆண்டில் மூப்புப் பட்டியலில் 300- 400 ஆம் இடங்களுக்கும் அப்பால் மிகத் தொலைவில் இருந்த மூவரைத் தேர்ந்தெடுத்து அமைச்சரவை பத்திரம் மூலம் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்காக அன்றைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த மகிந்த ராஜபக்சவினால் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பி. கிரிஷான்த பெலியத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்தவர்.

இவர் மகிந்த ராஜபக்சவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளித்தார் என்பதற்காகவும் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த நபர் - பி.ஜி.எஸ். குணதிலக்க 2004.05.20 அன்று பிரதமர் பாதுகாப்புப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் முக்கிய பதவியை வகித்தவர்.

மூன்றாவது நபர் - ஜி.எம். பிரஷாந்த பெரேரா 2004.05.20 முதல் அலரி மாளிகையின் அதிஉயர் பாதுகாப்பு வலையத்தின் கடமையாற்றியுள்ளார். இவையே அவர்களின் பதவி உயர்வுக்கு தகுதிகளாக கணிப்பிடப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தியே இந்த பதவியுயர்வுகளை வழங்கியுள்ளதாக வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நாமலுக்கு மீண்டும் சிறை.. சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

நாமலுக்கு மீண்டும் சிறை.. சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

 

கோட்டாபய ராஜபக்சவுக்கும் தண்டனை கோரும் அருட்தந்தை! சலே மீது நம்பிக்கையற்ற நிலை

கோட்டாபய ராஜபக்சவுக்கும் தண்டனை கோரும் அருட்தந்தை! சலே மீது நம்பிக்கையற்ற நிலை

   

YOU MAY LIKE THIS VIDEO.. 


மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US