அநுரவினால் ஏமாற்றமடைந்த மகிந்த - வீடு கொடுக்கும் மகா சங்கத்தினர்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வீடு ஒன்றை வழங்குவதற்கு மகாநாயக்க தேரர்கள் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் வரப்பிரசாத இழப்பால் அவருக்கான உத்தியோகபூர்வ வீடு இல்லாமல் போனமையினால், அவருக்கு வீடு ஒன்றை வழங்குவதற்கு தலையிடுவதாக மகாநாயக்க தேரர்கள் சிலர் தன்னிடம் தெரிவித்துள்ளதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் மனைவிகளுக்கு வீடுகள் மற்றும் வரப்பிரசாதங்களை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கான சட்டப்பூர்வ சட்டத்திருத்தம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதனை நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.





வெளித்தோற்றத்தால் அனைவரையும் கவரும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
