மகிந்தவை புகழ்ந்தும் அநுரவை இகழ்ந்தும் பேசிய டட்லி சிரிசேன
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போன்ற பலமான தலைவர்கள் மீண்டும் உருவாகப் போவதில்லை என்று பிரபல வர்த்தகர் டட்லி சிரிசேன குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர லொஹான் ரத்வத்தையின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டிருந்த நிலையில் அங்கிருந்தவர்கள் முன்னிலையில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மகிந்தவைப் போன்ற உறுதியான, பலம்வாய்ந்த தலைவர்கள் மீண்டும் இந்த நாட்டில் உருவாகப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அநுர மீது விமர்சனம்
அத்துடன், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறித்தும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க, வெறுமனே பொய்யான காட்சிகளை சித்தரிக்க மட்டுமே தெரிந்த ஒருவர் என்பதாக டட்லி சிரிசேன அங்கு கருத்து வெளியிடும்போது குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




