மே - 09 வன்முறையின் பின்னர் முதன்முதலாக பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட மகிந்த (PHOTOS)
மே - 09 ஆம் திகதிக்கு பிறகு பொதுக்கூட்டம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்றுள்ளார்.
‘ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற தொனிப்பொருளில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தனவின் களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலக வளாகத்தில் இந்த கூட்டம் இடம்பெற்றது.
இதற்கு முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச தலைமை தாங்கியுள்ளார்.
இந்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.