திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச! பின்னணியில் வெடித்த மோதல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ராஜபக்ச குடும்பத்தினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்ச தரப்பிற்கும், மகிந்த ராஜபக்ச தரப்பிற்கும் இடையேயும் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனியார் வைத்தியசாலையில் அனுமதி
இன்று காலை திடீரென ஏற்பட்ட இதய பிரச்சினை காரணமாக மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரண்டு அணிகளில் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து மகிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செய்தித்தொடர்பாளர் சஞ்சீவ எதிரிமன்னவும் உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்த செய்தியினால் அதிருப்தியடைந்த மகிந்த ராஜபக்சவின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே, வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகவே அவர் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளதாக மறுப்பு தெரிவித்திருந்தார்.
தற்போது இந்த தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்ச தரப்பிற்கும், மகிந்த ராஜபக்ச தரப்பிற்கும் இடையேயும் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan