இந்தியாவில் இருந்து எடுத்துவரப்பட்ட விக்ரகத்துக்கு மாவிட்டபுர கந்தன் ஆலயத்தில் மகாயாகம்
இந்தியாவிலிருந்து கதிர்காமத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக எடுத்து வரப்பட்ட சுப்ரமணியன் சமேத வள்ளிக்கு நேற்று(20.01.2025) திங்கட்கிழமை மாவிட்டபுர கந்தன் ஆலயத்தில் விசேட மகாயாகம் இடம்பெற்றுள்ளது.
இந்தியா திருச்செந்தூரிலிருந்து எடுத்துவரப்பட்ட சுப்ரமணியன் சமேத வள்ளி தெய்வானைக்கு பழனியில் விசேட மகாயாகம் இடம்பெற்று, கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்துக்கு எடுத்து வரப்பட்டது.
இதனையடுத்து, யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து உகந்தை முருகன் ஆலயத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற உள்ளன.
கதிர்காமத்தில் பிரதிஷ்டை
இதன் பின்னர், கொழும்பு தலைநகருக்கு முருகப் பெருமான் எடுத்து செல்லப்பட்டு, கொழும்பிலிருந்து கதிர்காமம் வரையிலான முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து எதிர்வரும் மார்ச் மாதம் கதிர்காமத்தில் சுப்பிரமணியன் சமேதராக பிரதிஷ்டை செய்யப்பட உள்ளார்.
குறித்த நிகழ்வுகள் கதிர்காம ஆலய நிர்வாக உறுப்பினரும் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநருமான ஜீவன் தியாகராசா தலமையில் நடைபெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |