இலங்கையில் தடை செய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிறுவனங்கள்: பட்டியலை வெளியிட்ட மத்திய வங்கி
1988ஆம் ஆண்டின் 30ஆம் எண் வங்கிச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பல்வேறு நிறுவனங்கள் மீதான விசாரணைகளை நிறைவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பட்டியல்
இதன் அடிப்படையில், அத்தகைய தடை செய்யப்பட்ட திட்டங்களில் ஈடுபட்டுள்ள 21 நிறுவனங்களை மத்திய வங்கி அடையாளம் கண்டுள்ளது.
1. டைன்ஸ் லங்கா ஹெல்த் கேர் (பிரைவேட்) லிமிடெட்
2. பெஸ்ட் லைஃப் இன்டர்நேசனல் (பிரைவேட்) லிமிடெட்
3. மார்க் - வோ இன்டர்நேசனல் (பிரைவேட்) லிமிடெட்
4. விஎம்எல் இன்டர்நேசனல் (பிரைவேட்) லிமிடெட்
5. (நீதிமன்ற உத்தரவின்படி) நிறுவனத்தின் பெயர் வெளியிடப்படவில்லை
6. ஃபாஸ்ட்3 சைக்கிள் இன்டர்நேசனல் (பிரைவேட்) லிமிடெட்
7. ஸ்போர்ட் செயின் ஒப், ஸ்போர்ட் செயின் இசட்எஸ் சொசைட்டி, ஸ்ரீலங்கா
8. ஒன்மாக்ஸ்டிடி
9. எம்டிஎஃப்,ஆப், எம்டிஎஃப், எஸ்எல் குரூப், எம்டிஎஃப், சக்ஸஸ் லங்கா, எம்டிஎஃப், டிஎஸ்சிசி குரூப்
10. ஃபாஸ்ட்வின் (பிரைவேட்) லிமிடெட்
11. ஃப்ருகோ ஒன்லைன் ஒப்ஃஃப்ருகோ ஒன்லைன் (பிரைவேட்) லிமிடெட்
12. ரைட் டு த்ரீ ஃப்ரீடம் (பிரைவேட்) லிமிடெட்
13. க்யூநெட்
14. எரா மிராக்கிள் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் ஜெனிசிஸ் பிசினஸ் ஸ்கூல்
15. லெட்ஜர் பிளாக் 16. இசிமாகா இன்டர்நேசனல் (பிரைவேட்) லிமிடெட்
17. பீகொயின் ஒப் மற்றும் சன்பேர்ட் ஃபவுண்டேசன்
18. விண்டெக்ஸ் டிரேடிங்
19. தி என்ரிச் லைஃப் (பிரைவேட்) லிமிடெட்
20. ஸ்மார்ட் வின் என்ட்ரப்ரென்யூரர் (பிரைவேட்) லிமிடெட்
21. நெட் ஃபோர் இன்டர்நேசனல் (பிரைவேட்) லிமிடெட்ஃநெட்ரிக்ஸ் ஆகிய நிறுவனங்களே குறித்த பட்டியலில் அடக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், சட்ட கட்டமைப்பிற்கு வெளியே செயற்படக்கூடிய நிறுவனங்கள் அல்லது நிதித் திட்டங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கையின் மத்திய வங்கி பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |