இராணுவத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய வேலைத்திட்டம்
நாடு முழுவதும் உள்ள நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் இலங்கை இராணுவத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைய, இந்த களஞ்சியசாலைகள் சுத்தம் செய்யப்படுகின்றன.
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்
இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த களஞ்சியசாலைகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும், இதனால் நெல் கொள்வனவு நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, நெல் சந்தைப்படுத்தல் சபையின் கீழ் உள்ள 209 நெல் களஞ்சியசாலைகள் சுத்தப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri