சுவிட்ஸர்லாந்தில் புலம்பெயர்ந்தோர் மீது குற்றம் சுமத்தி வரும் வலதுசாரி அரசியல்வாதிகள்
சுவிட்ஸர்லாந்தில் (Switzerland), அதிகரித்து வரும் வீட்டு வாடகை பிரச்சினைக்கு புலம்பெயர் மக்களே காரணம் என அந்நாட்டு வலதுசாரி அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
சுவிஸில், அதிகரித்து வரும் வீட்டு வாடகையால் நடுத்தர வகுப்பு மக்கள் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளமை குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறைந்த வருமானம் ஈட்டும் மக்கள், தங்கள் வருவாயில் கிட்டத்தட்ட பாதியை வீட்டு வாடகைக்கே செலவிடுவதாக அந்நாட்டு அலுவலக தரவுகள் தெரிவிக்கின்றன.
வீட்டு வாடகை
அதாவது, சராசரியாகப் பார்க்கையில், வாடகை வீடுகளில் குடியிருப்போர், தங்கள் வருவாயில் மூன்றில் ஒரு பங்கை வீட்டு வாடகைக்கே செலவிடுகின்றனர்.
அதிக வாடகை காரணமாக வசதிகள் நிறைந்த வீடுகளுக்கு மாற்றி கொள்ளுவதற்கு சிரமப்படும் நடுத்தர வகுப்பு மக்கள், தொடர்ந்து ஒரே வீட்டில் குடியிருப்பதால், குடியிருப்புகள் தொடர்பான வியாபார நடைமுறைகளைக் கொண்ட சொத்துச் சங்கிலி பாதிக்கப்படுவதும் கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், புலம்பெயர்ந்தோர் மக்கள் தான் வீடுகள் தட்டுப்பாடு பிரச்சினைக்கு காரணம் என அந்நாட்டு வலதுசாரி அரசியல்வாதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஆனால், அப்படி இல்லை, போதுமான வீடுகள் கட்டப்படாததே பிரச்சினை என்கிறார்கள் எதிர் தரப்பினர். வீடு கட்ட அனுமதி பெறுவதிலுள்ள பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் அவர்கள், பிரச்சினை தீர, கூடுதல் வீடு கட்டும் கூட்டுறவு அமைப்புக்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்கிறார்கள்.
மொத்தத்தில், அதிகரித்து வரும் வீட்டு வாடகையால் நடுத்தர வகுப்பு மக்கள் அவதியுறுவதாக துறைசார் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |