தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி விவகாரம் குறித்து ஜனாதிபதிக்கு மனு

Sri Lankan Tamils Prime minister President of Sri lanka Northern Province of Sri Lanka
By Theepan Jan 20, 2025 10:36 PM GMT
Report

விசுவமடு - தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினர் உள்ளிட்டோர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மனு ஒன்றினை கையளிக்கவுள்ளனர். 

இது தொடர்பில் நேற்றைய தினம் குறித்த தரப்பினர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தினை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினர் மாவீரர்களின், பெற்றோர், உரித்துடையோர் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி விடுவிப்பு தொடர்பில் அண்மையில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்.

பிரித்தானியாவில் வானதி சீனிவாசனுடன் ஈழத்தமிழர்கள் சந்திப்பு

பிரித்தானியாவில் வானதி சீனிவாசனுடன் ஈழத்தமிழர்கள் சந்திப்பு

ஆளுநருடன் சந்திப்பு 

இதன் தொடர்ச்சியாக சேகரிக்கப்பட்ட சுமார் 2500 பேரின் கையெழுத்துக்கள் அடங்கிய மனுவை நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதற்கான ஆளுநருக்குரிய மனுவை கையளித்து காணியை விடுவிக்க கோரும் முகமாகவு குறித்த சந்திப்பு இடம்பெற்றது. 

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி விவகாரம் குறித்து ஜனாதிபதிக்கு மனு | Theravil Land Issue Petition To President And Pm

இதன்போது நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் ஆளுநர் ஆகியோருக்கான மனுக்கள் கையளிக்கப்பட்டதுடன் குறித்த மனுக்களில், 

"கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புன்னைநீராவி கிராமசேவையாளர் பிரிவில் குமாரசாமிபுரம் கிராமத்தில் தேராவில் பகுதியில் உள்ள தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு காலப்பகுத்தியிலிருந்து 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடையும் இறுதிக்காலம் வரை போரில் வீரகாவியமான எண்ணாயிரத்திற்கும் அதிகமான எமது பிள்ளைகள் உரித்துடையோர் அனைவரையும் யுத்தவீரர்களுக்கான மரியாதையுடன் புதைக்கப்பட்டும் நடுகற்கள் நாட்டப்பட்டும் பராமரிக்கப்பட்டு பூசிக்கப்பட்டு வந்தமை இவ்வுலகமும் தாங்களும் அறிந்த உண்மை.

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பிணையில் விடுதலை

இராணுவ தேவைகள் 

இறுதி யுத்தகாலத்தில் கனரக வாகனங்கள் கொண்டு வடக்கு - கிழக்கில் உள்ள புனித துயிலும் இல்லங்கள் அனைத்தும் அழிக்கப்பட்ட போது எமது தேராவில் மாவீரர் துயிலும் இல்லமும் முற்றுமுழுதாக சிதைத்து அழிக்கப்பட்டது.

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி விவகாரம் குறித்து ஜனாதிபதிக்கு மனு | Theravil Land Issue Petition To President And Pm

அதன் பின்னரான காலப்பகுதியில் துயிலுமில்ல வளாகமானது வேறு அரச இராணுவ தேவைகளுக்காக கடந்த அரசுகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை நிதர்சனமான உண்மை.

மேற்படி விடயமானது பெற்றோர்களாகிய எமக்கும் உறவினர்களுக்கும் மிகவும் புனிதமான துயிலும் இல்லங்களை இழிவுபடுத்தும் இத்தகைய செயல்கள் மிகுந்த மன வலியையும் சொல்லொணா மன உளைச்சல் மற்றும் துயரத்தையும் ஏற்படுத்துயுள்ளது.

போர் முடிந்ததிலிருந்து, இலங்கை இராணுவத்தின் 573ஆவது படையணி தேராவில் துயிலும் இல்லத்தை வலிந்து தமது ஆக்கிரமிப்பில் வைத்துள்ளது.14ஆவது இலங்கை தேசிய படையணி (14 SLNG) அங்கு தங்கி சீமெந்து கற்களை உற்பத்தி செய்யும் இடமாக அதைப் பயன்படுத்தினர். தற்போது அந்த செயல்பாடும் அங்கு இல்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு நீதிமன்ற அழைப்பாணை

நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு நீதிமன்ற அழைப்பாணை

முன்வைக்கப்படும் கோரிக்கை 

உயிரிழந்தவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடங்களை வேறு நோக்கங்களுக்காக, அதிலும் குறிப்பாக வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது சர்வதேச விதிமுறைகள் மற்றும் மரபுகளை அப்பட்டமாக மீறுவதாகும், மேலும் அது புனிதத்தை களங்கப்படுத்துவதற்குச் சமம்.

தற்போது, அங்கு ஐந்து இராணுவத்தினர் மட்டுமே தங்கியுள்ளனர், மேலும் அவர்கள் எந்த வேலையிலும் ஈடுபடவில்லை. இராணுவம் வேண்டுமென்றே அந்த நிலத்தை தங்களின் வலிந்த ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க விரும்புகிறது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

எங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் விதைக்கப்பட்டுள்ள தேராவில் துயிலும் இல்ல நிலத்தை விடுவிக்குமாறு நாங்கள் இப்போது உங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி விவகாரம் குறித்து ஜனாதிபதிக்கு மனு | Theravil Land Issue Petition To President And Pm

இந்த துயிலும் இல்லம் எங்களுக்கு மிகவும் புனிதமானது, அங்கு சென்று நாங்கள் வீழ்ந்த எமது உறவினர்களுக்கு புனித அஞ்சலி செலுத்துவதற்கும், மரியாதை செலுத்துவதற்கும் தனிநபர் சுதந்திரத்தை பாதிக்காத வகையில், சட்ட வழிமுறைகளுக்கு அமைவாக அந்த நிலத்தை விடுவித்து கொடுக்குமாறு வேண்டுகிறோம்.

மேலும், அந்த நிலத்தை விடுவிக்கும் போது, அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் ஆண்டு முழுவதும், குறிப்பாக ‘மாவீரர் நாளன்று’ பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வந்து அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக, தடையற்ற அணுகலை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் பிரதிகள், பிரதமர், வடக்கு மாகாண  ஆளுநர், மீன்வளத்துறை அமைச்சர், யாழ்ப்பாண மற்றும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US