சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் தொடர்பான சட்டத் திருத்தங்களுக்கு மகா சங்கத்தினர் ஆதரவு
சிறையில் அடைக்கப்படும் பௌத்த பிக்குகளை நடத்தும் நடைமுறைகள் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு மகா சங்கத்தினர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் “தஹம்பாய” வளாகத்தில் நேற்று(20.10.2026) நடைபெற்ற புத்த சாசன பேரவைக் கூட்டத்தில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
தேரரின் காவி உடை அகற்றப்பட்டமை
சம்பந்தப்பட்ட சட்டத்தின் 356 மற்றும் 550 ஆகிய பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரும் அமைச்சின் செயலாளருமான பிரின்ஸ் சேனாடீர விளக்கமளித்தார்.

சிறையிலடைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்கு ஒருவரை நீதிமன்றத்திற்கோ அல்லது பிற உத்தியோகபூர்வ தேவைகளுக்கோ வெளியே அழைத்து வரும் போது, அவர் சார்ந்த நிக்காய (பீடம் )பிரிவு அல்லது சங்க சபையின் பரிந்துரையின் பேரில் மட்டுமே காவி உடை அணிய அனுமதிக்கப்பட வேண்டும் எனப் முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்போது, முன்மொழியப்பட்டுள்ள சட்ட விதிகளை நடைமுறைப்படுத்துவது குறித்து பிரதிநிதிகள் அல்லது சங்க சபைகள் இணைந்து கலந்துரையாடி பொருத்தமான பொதுவான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும் என மகா சங்கத்தினர் யோசனை தெரிவித்தனர்.
கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டமை தொடர்பில் எழுந்த பொதுமக்களின் கவலைகள் குறித்து மகா சங்கத்தினரின் கருத்துக்களைப் பெறுவதும், அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துவதும் இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
பிரபல அரசியல்வாதியொருவரை கொலை செய்ய இரகசிய பணிப்புரை வழங்கிய மகிந்த - வெளிப்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல்