முஸ்லிம்கள் இறந்தால் பரவாயில்லை என்ற சமூக ஊடகப் பதிவு: எழுந்துள்ள பெரும் சர்ச்சை
முஸ்லிம்கள் இறந்தால் பரவாயில்லை என்ற அர்த்தத்தில் சமூக ஊடகமொன்றில் இடப்பட்டதாக கூறப்படும் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அக்குரனை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவம் தொடர்பில் மருத்துவர் எனக் கூறப்படும் நபர் ஓருவர் மோசமான பதிவொன்றை இட்டிருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விபத்து இடம்பெற்றதன் பின்னர் ”அக்குரனையில் முஸ்லிம்கள் தானே வாழ்கிறார்கள் அவர்கள் இறந்தால் பரவாயில்லை” என்ற வகையில் நபர் ஓருவர் முகநூலில் பதிவிட்டிருந்தார்.

எனினும் இந்த பதிவு தொடர்பில் பல்வேறு தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலும் இந்த விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இனவாத கருத்துக்களை வெளியிட்ட குறித்த நபர் மருத்துவர் என கூறப்படுவதாகவும் உன்னத மருத்துவ தொழிலில் ஈடுபடும் ஒருவர் இவ்வாறு இழிவான கருத்துக்களை பதிவிட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது.
இதன் போது மருத்துவ பேரவையின் ஒழுக்க நெறிகளுக்கு அமைவாக அவ்வாறு கருத்து வெளியிட முடியாது எனவும் விபரங்களை தாருங்கள் நான் நடவடிக்கை எடுக்கின்றேன் எனவும் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மருத்துவ பேரவைக்கு இந்த விவகாரம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 3 மணி நேரம் முன்
அமெரிக்கா மீண்டும் தாக்கினால்., இந்த 9 நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் எச்சரிக்கை News Lankasri
பிரான்சில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு: பாரிஸின் முக்கிய வீதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை News Lankasri