நாடளாவிய ரீதியில் இன்றும் மின்வெட்டு - வெளியான விபரம்
நாடளாவிய ரீதியில் இன்றும் (21) ஒரு மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதற்கமைய, நான்கு வலயங்களாகப் பிரிக்கப்பட்டு இன்றைய தினமும் (21) மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வலயத்திற்கு ஒரு மணிநேரம்
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் மூன்று நாட்களுக்கு கட்டம் கட்டமாக ஒரு மணிநேர மின் விநியோகத் தடையை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது.

அதன்படி மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலான காலப்பகுதியில் ஒவ்வொரு வலயத்திற்கு ஒரு மணி நேரம் வீதம் இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அதன் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.
தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு தனியார் நிறுவனம் (National System Operator Private Limited) முன்மொழிந்த மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த 19 ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.