இலங்கையில் புதிய சட்டமூலங்களால் வெடித்துள்ள சர்ச்சை! மக்களுக்கு ஆபத்தா..
இலங்கை நாடாளுமன்றத்தில் ஒக்டோபர் 20ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு புதிய சட்டமூலங்கள் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
வெளிநாட்டு பயங்கரவாதப் போராளிகளின் அச்சுறுத்தல்களைத் தடுப்பதும், எல்லை கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், பணமோசடி மற்றும் மனிதக் கடத்தல் போன்ற குற்றங்களைக் கட்டுப்படுத்துவதும் இந்தச் சட்டமூலங்களின் முக்கிய நோக்கங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
இந்தச் சட்டமூலங்களின் கீழ், சந்தேகநபர்களைத் தடுத்து வைத்து விசாரணை நடத்துதல், தொலைபேசி மற்றும் டிஜிட்டல் தகவல்களைப் பெறுதல் உள்ளிட்ட அதிகாரங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில சூழ்நிலைகளில் நீண்டகாலத் தடுப்புக்காவலுக்கு வழிவகுக்கும் ஏற்பாடுகளும் முன்மொழியப்பட்டுள்ளன.
மேலும், குற்றக் குழுக்களுடனான தொடர்புகள், கூட்டங்களில் பங்கேற்பது, உடை, கை சைகைகள் மற்றும் பச்சை குத்தல்கள் போன்ற அடையாளங்களும் விசாரணைகளின்போது கவனத்தில் கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்தச் சட்டமூலங்கள் தொடர்பில் சிவில் சமூக அமைப்புகள் பல்வேறு கவலைகளை முன்வைத்துள்ளன.
சட்டமூலங்கள் முன்மொழியும் அதிகாரங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும், சந்தேகநபர்களின் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்படும், நீதிமன்றக் கண்காணிப்பு எந்த அளவுக்கு உறுதிப்படுத்தப்படும் என்பன தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விடயங்களாக உள்ளன. இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்து வருகின்றது Newsinsight நிகழ்ச்சி...
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 10 மணி நேரம் முன்
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri