அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்த ரணில் தரப்பினர்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) முக்கியஸ்தர்கள் அஸ்கிரிய மகா விஹாரையில் சியாம் மகா நிக்காயவின் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்துள்ளனர்.
கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன, கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல மற்றும் பல மூத்த கட்சி உறுப்பினர்கள் குறித்த சந்திப்பில் கலந்துக்கொண்டுள்ளனர்.
மகா சங்கத்தினர் ஆசிர்வாதம்
குறித்த சந்திப்பானது இன்று (26) காலை இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விஷயங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை குறித்து ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள் மகாநாயக்க தேரர் மற்றும் மகா சங்கத்தினருக்கு விளக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரணில் விக்ரமசிங்கவுக்கு மகா சங்கத்தினர் ஆசிர்வதித்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



