ரணில் கைதினை தொடர்ந்து தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 28 முக்கியபுள்ளிகள் கலக்கத்தில்..
நாட்டின் முன்னாள் ஜனாதிபதியே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஊழல்வாதிகள் என்று கூறப்படுபவர்கள் அல்லது சட்டத்திற்கு புறம்பாக சொத்து சேர்த்த பலர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இந்த விடயம் தொடர்பான 28 பேரின் விபரங்களை தனியார் தொலைக்காட்சியொன்று வெளியிட்டிருந்தது.
குறித்த 28 பேரில் 25 பேர் சிங்கள சமூகத்தை சார்ந்தவர்களும், 3 தமிழ் அரசியல்வாதிகள் உள்ளடங்கியிருந்தனர்.
இந்த பட்டியலில் உள்ளவர்கள் மீது விசாரணைகள் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி....




