கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் வெடித்த மோதல் - உயிரிழந்த கைதி தொடர்பில் வெளியான தகவல்
கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த கைதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாதாள உறுப்பினரின் ஆதரவாளர் உயிரிழப்பு
சிறைச்சாலைக்கு வௌியில் இருந்து பொதியொன்று எறியப்பட்ட நிலையில், அதனை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைப்பற்றியமையினால் பதற்றம் நிலவியதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், நேற்று (06) இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்து உயிரிழந்தவர் ‘கொஸ் மல்லி’ எனப்படும் பாதாள உறுப்பினரின் ஆதரவாளர் என சந்தேகிக்கப்படும் தடுப்புக்காவல் கைதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதலில் படுகாயமடைந்த கைதி, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான பிரேத பரிசோதனை மற்றும் மேலதிக விசாரணை நடவடிக்கைகளைப் பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.