ஜனாதிபதியை சந்திப்பதற்காக மூன்று தடவை மகஜர் அனுப்பியும் பயனில்லை: அன்னலிங்கம் அன்ராசா
ஜனாதிபதியை சந்திப்பதற்காக மூன்று தடவை மகஜர் அனுப்பியும் எந்தவித அழைப்பும் இதுவரை இல்லை என வடமாகாண கடற்றொழிலாளர் சமாசங்களின் பிரதிநிதி அன்னலிங்கம் அன்ராசா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (01.06.2023) யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த ஆறு மாதங்களுக்குள் மூன்று தடவைகள் தம்மால் மூன்று மகஜர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாண கடற்றொழிலாளர்களின் பிரச்சினை
அதில் முதலாவது மகஜர் யாழ்ப்பாண மஹ விகாராதிபதி ஊடாகவும், அதனை தொடர்ந்து வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஊடாகவும் அனுப்பியிருந்தோம்.
அதற்க்கும் ஜனாதிபதியிடமிருந்து சந்திப்பதற்கான எந்த விதமான அழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை.
நாங்கள் வட மாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்கள் ஒன்றிணைந்து எங்களுடைய வடமாகாண கடற்றொழிலாளர்களுடைய பிரச்சினைகளை முன் வைத்து வருகிறோம்.
[1J6NZ
பிரச்சினைகளை தெளிவுபடுத்தி வருவதோடு எங்களுடைய கோரிக்கைகளையும் முன்வைத்து வருகிறோம்.
இந்த வகையிலே பருத்தித்துறை பிரதேசத்திலேயே வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக எங்களுடைய ஜனாதிபதி அவர்களுக்கு மூன்றாவது மகஜராக நாங்கள் பருத்தித்துறையை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு 2023 ஆம் ஆண்டு நாலாம் மாதம் பருத்தித்துறை பிரதேச செயலர் ஊடாகவும் மகஜர் அனுப்பியிருந்தோம்.
பெரும் ஆபத்து
அதற்கும் இதுவரை எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. வடக்கு கடற்றொழிலாளர் சமூகம் மிகப் பெரும் ஆபத்துகளையும் நெருக்கடிகளையும் சந்தித்து வருவதாக அதில் அனுப்பி இருந்தோம்.
ஆனால் இதுவரை எவற்றிற்கும் ஜனாதிபதி பதிலளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் இன்னும் பல பிரச்சினைகள் தொடர்பில் முன்னாள்
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன
முன்னாள் தலைவர் நா.வர்ணகுலசிங்கம், பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர் சங்க
பிரதிநிதி ஏ.கைற்றல் ஆகியோரும் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.





மட்டக்களப்பு-புதுக்குடியிருப்பு இனப்படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவு தினம் 36 நிமிடங்கள் முன்

குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam
