மதுகம ஷானின் மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காத ஆத்திரத்தில் ஜகத் விதானவுக்கு அச்சுறுத்தல்
பிரபல பாதாள உலகக்கும்பல் உறுப்பினரான மதுகம ஷான் என்பவரின் மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காத காரணத்தினாலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மதுகம ஷான், தற்போதைக்கு இலங்கையில் இருந்து தப்பியோடி துபாயில் தலைமறைவாக வசித்து வருகின்றார்.
வேண்டுகோள் முன்வைப்பு
இந்நிலையில், கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போது தனது மனைவிக்கு ஐக்கிய மக்கள் சக்தி மூலம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு மதுகம ஷான், ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும், ஜகத் விதான எம்.பி. அதற்கு சம்மதிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. அதே போன்று மதுகம ஷானுக்கு நெருக்கமான வேறொரு பெண் ஜகத் விதான எம்.பியின் நிறுவனமொன்றில் பணிபுரியும் நிலையில் அவருக்கு அரசியலில் நுழைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் ஜகத் விதான எம்.பி.யிடம் மதுகம ஷான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதற்கும் ஜகத் விதான எம்.பி. மசியவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே மதுகம ஷான் தற்போதைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam