இலங்கையில் மகளுடன் பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்ட பிரித்தானிய தந்தைக்கு நேர்ந்த கதி
இலங்கையில் தனது மகளின் 34வது பிறந்தநாளைக் கொண்டாட வந்த பிரித்தானியர் ஒருவர் மலையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவின் Oak Path பகுதியை சேர்ந்த சுற்றுலாப் பயணியான பிரட் மெக்லீன் என்ற 63 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தனது மகளாக நடாலியின் 34வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவர் 16 ஆம் திகதி இலங்கைக்கு வந்திருந்தார்.
மலையிலிருந்து வீழ்ந்து மரணம்
தந்தையும் மகளும் மாத்தறையில் உள்ள வெலிகம பகுதிக்குச் சென்று, பின்னர் 23 ஆம் திகதி எல்ல நகரத்திற்கு சென்றுள்ளனர்.

தனது மகளுடன் எல்ல மலைகளைப் பார்வையிடச் சென்ற போது திடீரென மலை உச்சியில் இருந்து பிரட் மெக்லீன் கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு பண்டாரவலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பதுளை போதனா வைத்தியசாலை அனுப்பி, அங்குள்ள சிறப்பு மருத்துவ அதிகாரியால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பண்டாரவளை நீதவான் கெமுனு சந்திரசேகர எல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri