துவாரகாவின் உரையின் பின் காத்திருக்கும் பெரும் ஆபத்து! அமெரிக்க பேராசிரியர் எச்சரிக்கை(Video)
துவாரகா என்ற பெயரில் வெளிவந்த காணொளி உண்மையில் போலியானது என்பதை நான் நம்புகின்றேன் என அமெரிக்க சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் பெயரைச் சொல்லி வெளியான காணொளியில் தீவிரமாக இரண்டு விடயங்களை அவதானிக்க முடிந்தது.
ஒன்று, அவரது உடல் மொழி மற்றும் அவர் பேசிய விதம் என்பன அப்படியே பிரபாகரனின் சாயலை ஒத்திருந்தது. இந்த இரண்டு விடயங்களையும் வைத்துதான் பெரும்பாலும் இது ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது என்று நான் நம்புகின்றேன்.
அடுத்தது, துவாரகா என்ற பெயரில் வெளிவந்த காணொளியில் நான் பார்த்த அந்த எட்டு நிமிடங்களுக்குள் பிரபாகரனை தேசியத் தலைவர் என்று கூறுகின்றாரே தவிர அப்பா என்று குறிப்பிடவில்லை.
அது உண்மையிலேயே துவாரகாவாக இருந்தால், முதலில் அப்பா என்றுதானே அழைத்திருக்க வேண்டும். எனவே இது உண்மையான காணொளி அல்ல என்றுதான் நான் நினைக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |