400 ரூபாவாக அதிகரித்த டொலரின் பெறுமதி : இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருந்த சிக்கல்கள்
கடந்த காலங்களில் 200 ரூபாயில் இருந்த டொலர் 400 ரூபாவுக்குச் சென்றது. பணவீக்கம் அதிகரித்து பொருளாதாரம் சரிந்தது. எங்களுக்கு கடினமான தேர்வுகள் விடப்பட்டன என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரம் சரிந்தது
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகள் கொடுத்தாலும் இல்லாவிட்டாலும் எங்களுக்கு வேறு வழியில்லை. வருமானம் செலவுக்கு பொருந்தவில்லை என்றால், பணத்தை வார்ப்பதே நமக்கு இருக்கும் ஒரே வழி.
அதனால் 200 ரூபாயில் இருந்த டொலர் 400 ரூபாவுக்குச் சென்றது. பணவீக்கம் அதிகரித்து பொருளாதாரம் சரிந்தது. எங்களுக்கு கடினமான தேர்வுகள் விடப்பட்டன. எதிர்க்கட்சிகள் எல்லாவற்றையும் விமர்சித்தாலும், அவர்களின் தீர்வு என்ன?
கடன் மறுசீரமைப்புத் தொடர்பில் ஏற்பட்ட முன்னேற்றமானது இலங்கை தொடர்பாக சர்வதேச மட்டத்தில் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு இது வழியேற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
