அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அம்பலவன்பொக்கனையில் சிறப்புற நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்(Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தில் அம்பலவன்பொக்கனை சாள்ஸ் மண்டபத்தில் ஏற்பாடாகியிருந்த மாவீரர் நாள் 2023 நிகழ்வுகள் சவால்களுக்கு மத்தியிலும் சிறப்புற நடைபெற்றுள்ளது.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டிருந்த அச்சுறுத்தல்களை துணிந்து எதிர் கொண்டு மாவீரர் நாளின் இறுதி நாள் நிகழ்வுகளில் பெரும் திரளான மக்கள் கலந்து மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலித்திருந்தனர்.
பொதுச்சுடர் ஏற்றல்
2023 மாவீரர் நாளின் பொதுச்சுடரினை இரண்டு மாவீரர்களின் தாயாரான மகேந்திரராசா பரமேஸ்வரியினால் ஏற்றி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான சுடர்களும் ஏற்றப்பட்டது.
மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எழுச்சியுடனும் உணர்சி பொங்கிட மலர் தூவி அஞ்சலித்தனர் என சாள்ஸ் மண்டபத்தில் மாவீரர் நாள் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த ஏற்பாட்டுக்குழுவின் சார்பாக பேசியவர் குறிப்பிட்டுள்ளார்.















எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam
