மாவையின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் குடும்பத்தார் அதிரடி முடிவுகள்
தமிழரசுக்கட்சியின்(ITAK) சிரேஸ்ட தலைவர் மாவை சேனாதிராஜா(Mavai Senathirajah) இறுதிச்சடங்கிற்கு தமிழரசுக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் யாரையும் அனுமதிக்க மாட்டோம் என அவரின் குடும்பதரப்பினர் கூறியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், மாவை சேனாதிராஜாவின் சகோதரர் மற்றும் அவரின் மூத்த மகன் ஆகியோர் அவரின் உடலை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமை செயலகத்திற்கோ பொது மண்டபத்திற்கோ கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள் என யாழ்.பல்கலைக்கழக விரிவுரையைாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தமிழரசுக்கட்சியின் தலைமை செயலகத்திற்கு இல்லாவிட்டாலும், பொதுமண்டபத்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்குமாறு கட்சியின் நான் உட்பட சில முக்கியஸ்தர்கள் குடும்பத்தினர்களிடம் கோரிக்கை விடுத்தோம்.
அதற்கு பதிலளித்த குடும்பத்தினர், அவ்வாறு மாவை சேனாதிராஜாவின் உடல் கொண்டு செல்லும் பட்சத்தில் அவரின் மரணத்திற்கு காரணமானவர்கள் அங்கு வருவார்கள் அதனை தடுக்க முடியாது என கூறினர்.
அதனடிப்படையில் தான் மாவை சேனாதிராஜாவின் இறுதிச்சடங்குகள் அவரின் வீட்டில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன”என குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |