இலங்கை பாடசாலைகளிலும் Clean Sri Lanka வேலைத்திட்டம்!
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 'Clean Sri Lanka' திட்டத்தின் நோக்கங்களை பாடசாலை அமைப்புக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய கல்வித் துறையின் பிரதிநிதிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம், கல்வி அமைச்சில் நடைபெற்றுள்ளது.
மாணவர்களின் நடத்தை
இதன்போது சுகாதாரம், கழிவு முகாமைத்துவம், மாணவர்களின் நடத்தை மற்றும் நெறிமுறை குணங்களை வளர்ப்பது போன்ற கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு தொடர் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியின் போது, அதில் பங்கேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 'Clean Sri Lanka' திட்டத்தின் நோக்கங்களை விளக்கி, தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் 'Clean Sri Lanka' திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல தேவையான பயிற்சிகள் இதன்போது வழங்கப்பட்டன.
வேலைத்திட்டம்
இந்நிகழ்வு, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்கள் ஜி. எம். ஆர். டி. அபோன்சோ, எச். எம். கே. ஜே. பி. குணரத்ன உள்ளிட்ட ஜனாதிபதி பணிக்குழுவின் அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரந்த மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இந்தப் பயிற்சியில், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குழுவும் பங்கேற்றுள்ளனர்.
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan