அதிவேக நெடுஞ்சாலையில் சிக்கிய அதிசொகுசு வாகனம் - விசாரணையில் தொடரும் மர்மம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கைவிடப்பட்ட நிலையில் சொகுசு வாகனம் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைத்த தகவலுக்கமைய, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அபரெக்க மற்றும் பெலியத்த பகுதிகளுக்கு இடைப்பட்ட 140 கிலோமீட்டர் மையில் கல் அருகே சந்தேகத்திற்குரிய வாகனம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள், வாகனத்தை மேலதிக விசாரணைகளுக்காக திஹகொட பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட வாகனம்
இந்த நிலையில் வாகனத்தின் இலக்கத் தகடை சோதித்த போது அதே இலக்கத்தைக் கொண்ட மற்றுமொரு வாகனம் இரத்தினபுரியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

இரத்தினபுரியில் பதிவு செய்யப்பட்ட வாகனம் வெள்ளை நிறமாகும், ஆனால் மீட்கப்பட்ட வாகனம் மெரூன் நிறமாகும். மேலும், இரண்டினதும் எஞ்சின் இலக்கங்களும் வெவ்வேறானவை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வாகனம் தொடாங்கொட ஊடாக அதிவேக வீதிக்குள் நுழைந்து, மத்தள நோக்கி பயணித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திஹகொட பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இந்த வாகனத்தை சோதனையிட்ட போது, அதற்குள் குருநாகல் பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் பெயரைக் கொண்ட சான்றிதழ் மற்றும் நாட்குறிப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
நாட்குறிப்பில் இருந்த அடையாள அட்டைப் பிரதியை அடிப்படையாக கொண்டு பொலிஸார் நடத்திய விசாரணையில், அது பொதுஹெர பகுதியைச் சேர்ந்த ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த ஜனவரி 25ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விருந்தில் ஏற்பட்ட சண்டை.. வெளிவந்த உண்மையால் கோபத்தில் பாண்டியன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam