சொகுசு வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கான தகவல்! விலைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
சொகுசு வாகனங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வாகன கொள்வனவு

இதேவேளை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே கூறுகையில்,
வட்டி வீதங்களின் அதிகரிப்பால் வாகன கொள்வனவும் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி டொலரின் பெறுமதி உண்மையில் வீழ்ச்சியடைந்திருந்தால், அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.

இவற்றை நீக்கினால், டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதா இல்லையா என்பதை அறிய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன? News Lankasri
ஈஸ்வரியை அசிங்கமாக பேசிய அன்புக்கரசி, கழுத்தை பிடித்த தர்ஷினி.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam