விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா..! அரசியல் தலைவர்கள் வெளியிட்டுள்ள தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாகவும்,உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார்.ஆனால் எங்கு உள்ளார் என்பதினை தற்போது அறிவிக்க இயலாது' என உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார்.
பழ.நெடுமாறன் தெரிவித்த இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரபாகரன் உயிருடன் இல்லை என்று இலங்கை இராணுவம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
மேலும், விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தற்போது உயிருடன் இல்லை. 2009 மே 18ல் நடந்த இறுதிகட்ட போரில் அவர் உயிரிழந்ததற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது என்று இலங்கை இராணுவம் மறுப்பு வெளியிட்டிருந்தது.
பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
துரைமுருகன்
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு உள்ள விவகாரம் தொடர்பில் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் தான் பதில் கூற வேண்டும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் விவகாரம் நம்ம ஊர் சமாச்சாரம் இல்லை.வேறு ஒரு நாட்டில் நடந்த சதி.அதனையே நெடுமாறன் கூறுகிறார். பிரபாகரன் உயிரோடு உள்ள விவகாரம் தொடர்பில் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் தான் பதில் கூற வேண்டும்.இதில் எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி
“பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி தான். பிரபாகரன் வந்தால் நான் சந்திப்பேன். அதில் ஒன்றும் மாற்று கருத்து இல்லை. பழ.நெடுமாறன் பிரபாகரனை காட்டினால் நானும் சந்திப்பேன்” என்றார்.
ஒருவர் உயிரோடு இருக்கிறார் என சொன்னால் மகிழ்ச்சிதான். அப்படி வந்தால் நானும் சென்று பார்த்துவிட்டு வருவேன். நாங்கள் தலையீட்டு எதுவும் சொல்ல வரவில்லை" என்றார்.
தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன்
“மறைந்து வாழும் பழக்கம் பிரபாகரனுக்கு கிடையாது. பழ. நெடுமாறன் கூறிய கருத்திலிருந்து நான் முரண்படுகிறேன். பிரபாகரன் தொடர்பாக பழ. நெடுமாறன் கூறியிருப்பது தவறான முன் உதாரணம்.
மக்களிடையே இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவதற்கு என்ன காரணம்? என அவர் பதில்சொல்ல வேண்டும்.
பிரபாகரன் மாவீரன், மறைந்து வாழும் தலைவர் அல்ல. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று சொல்வது தவறான ஒன்று என்பது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கருத்து” என்று கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வைகைசெல்வன்
” பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்கிற செய்தி மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று. எதிரியாக இருந்தாலும் உயிரோடு இருக்கிறார் என்கிற செய்தி மகிழ்ச்சிதான் அளிக்கும். பிரபாகரன் உயிரோடு வந்தால் பல்வேறு மர்ம முடிச்சுகள் அவிழும்.
தமிழக மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். அவருடைய வரவு நல்வரவாக இருக்க வரவேற்கிறோம்” என்றார்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)