‘‘விடுதலைப்புலிகளின் தலைவர் உயிரோடு இருந்தால் தாமாகவே காணொளி வெளியிட்டு உறுதி செய்யட்டும்’’ கொளத்தூர் மணி
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பது உண்மையாக இருந்தால் தாமாகவே காணொளி செய்தி வெளியிட்டால் உறுதிப்படுத்தலாம் என பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவரான திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாகவும்,உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார்.ஆனால் எங்கு உள்ளார் என்பதினை தற்போது அறிவிக்க இயலாது' என உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் இன்று செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார்.
பழ.நெடுமாறன் தெரிவித்த இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரபாகரன் உயிருடன் இல்லை என்று இலங்கை இராணுவம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவரான திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறுகையில்,
தமிழீழ விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தாமாகவே வெளிவந்து தம்மை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும்.காட்சி ஊடகத்தின் - காணொளி வழியாகவோ அல்லது நிகழ்கால நிகழ்வுகளை பேசி காட்சி வெளியிட்டாலோ அவர் இருப்பது உறுதிப்படும். அவர் இதை செய்வார் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 4 மணி நேரம் முன்

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
