தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் யுத்தத்தை ஆரம்பிக்க ராஜபக்சர்களா காரணம்: கொந்தளிக்கும் நாமல்
இன்னும் சில நாட்களில் ராஜபக்சர்களால் தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் யுத்தத்தை ஆரம்பித்தார் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
திருடன் என்றார்கள்..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இன்று நாம் ஒரு கட்சியாக கட்டியெழ வேண்டிய நேரமாகும். இந்தக் காலங்களில் எம்மைத் தாக்கினர். எம்மை வீழ்த்தினர். எம்மீது சேறு பூசினர். திருடன் என்றார்கள்.
இன்று இந்த நாட்டில் எது நடந்தாலும் அது ராஜபக்சவினால் தான் நடந்தது என்று கூறுகின்றார்கள்.
ராஜபக்சர்களால் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் யுத்தத்தை ஆரம்பித்தார் என்று இன்னும் சில நாட்ளில் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என குறிப்பிட்டார்.
எமது அன்பான பெற்றோர்களே நாம் தேர்தல் தொடர்பில் பேசவில்லை. எதிர்காலத்தில் எமது சக்தியுடன் உருவாகும் பலமான அரசாங்கத்தில் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வேகமாக உயரும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
