புலிகள் வருகின்றனர் என கிராமவாசிகளை அச்சுறுத்திய நபர்கள் கைது
விடுதலைப் புலிகள் வருகின்றனர் என அம்பாறை நவகிரியாவ காட்டில் இருந்து கத்தி கூச்சலிட்டு, கிராமவாசிகளை அச்சத்திற்கு உள்ளாகி, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் 7 பேர் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டதாக பக்கிஹெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“புலிகள் வெட்டுகின்றனர்” என சிலர் கூக்குரலிடும் சத்தம் கேட்டு, மின்சார வேலிளுக்கு பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருந்த சிவில் பாதுகாப்பு படையினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், பக்கிஹெல்ல பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், அம்பாறை மற்றும் அரந்தலாவ விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாருடன் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர்.
இதன் போது சந்தேக நபர்கள் சென்றிருந்த மோட்டார் சைக்கிள், மூன்று சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி என்பன அருகில் உள்ள வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் போது திவுலான காட்டுப் பகுதியை நோக்கி தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan