நாளை முதல் மேலும் சிலருக்கான பணம் வங்கிகளுக்கு விடுவிக்கப்படும்: மக்களுக்கு அறிவிப்பு
அஸ்வெசும திட்டத்திற்கான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலனை செய்யும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கமல் பத்மசிறி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அஸ்வெசும திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மேலும் சில பயனாளர்களுக்கான கொடுப்பனவுகள் நாளைய தினம் (01) முதல் வங்கிகளுக்கு விடுவிக்கப்படும்.
இலட்சக்கணக்கானோருக்கு கிடைக்கவுள்ள கொடுப்பனவு
சுமார் 6 இலட்சம் பயனாளிகளுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை குறித்த நலன்புரி திட்டத்திற்கான பணத்தை மக்கள் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பூரணை விடுமுறை தினமான நேற்றும் மக்கள் வங்கி, இலங்கை வங்கி உள்ளிட்ட வங்கிகள் திறக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 11 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

22 நாள் சிறை, 17 ஆண்டுகள் சட்ட போராட்டம்! சிறிய எழுத்துப்பிழையால் பறிபோன நபரின் வாழ்க்கை News Lankasri
