அஸ்வெசும பயனாளர்களுக்கு சாதகமான அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் இடைநிலை பிரிவின் கீழ் வழங்கப்படும் கொடுப்பனவை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், அந்த வகையினருக்கான 2500 ரூபா கொடுப்பனவை 5000 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (10.01.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

நிவாரண உதவித் திட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில், மேலும் 4 இலட்சம் பேரை நிவாரண உதவித் திட்டத்திற்கு உள்வாங்கத் தயாராக இருக்கின்றோம்.
இந்த வேலைத்திட்டத்தின் மூலம் 20 இலட்சம் பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் தற்போதைய பொருளாதார நிலைமையின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை நான்கு இலட்சத்தால் அதிகரிக்கப்படும்.
எனவே ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் புதிய விண்ணப்பங்கள் கோரப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri