திருகோணமலையில் பழைய பொலிஸ் காணிக்குள் ஒரு தொகை தோட்டாக்கள் மீட்பு
திருகோணமலை- தம்பலகாமம் பழைய பொலிஸ் நிலைய காணிக்குள் அண்மையில் ஒரு தொகை தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் தோட்டாக்கள் இருப்பதாக தம்பலகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் உடனடியாக மீட்டுள்ளனர்.
இதனடிப்படையில் இன்று (19.6.2026) காணிக்குள் விசேட அதிரடிப் படையினர் பொலிசார் இணைந்து இன்னும் இது தொடர்பான ஆயுதப் பொருட்கள் தவறவிடப்பட்டிருக்கலாம் என்ற நிலையில் மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு..! செம்மணி புதைகுழி விவகாரத்தில் போராட்டத்தில் குதித்த உறவுகள்
மேலதிக விசாரணை
குறித்த பழைய பொலிஸ் நிலையத்தை விட்டு புதிய கட்டிடத்துக்கு இடம்மாறி ஒரு வருடத்தை கடந்துள்ள நிலையில் காணியை துப்புரவு செய்யும் போது காலுறைகளில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் 40 தோட்டாக்களை மீட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





