தமிழர் பகுதிகளில் 36வது தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு

Sri Lankan Tamils Vavuniya Sri Lankan Peoples
By Thileepan Jun 19, 2026 02:27 PM GMT
Report

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 36வது தியாகிகள் தினம் தமிழர் பகுதிகளில் இன்று(19.06.2026) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

வவுனியா - தேக்கவைத்தையில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது,  மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைந்துள்ள பத்மநாபாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழர் பகுதிகளில் 36வது தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு | 36Th Martyrs Day Observed

இதனைத் தொடர்ந்து அவர் தொடர்பான நினைவு பேருரையும் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, இ.இந்திரராஜா மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழர் பகுதிகளில் 36வது தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு | 36Th Martyrs Day Observed

தமிழர் பகுதிகளில் 36வது தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு | 36Th Martyrs Day Observed

மன்னார்

ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் ஸ்தாபக தலைவர் கே.பத்மநாபா மற்றும் போராளிகளின் 36 ஆவது ஆண்டு தியாகிகள் தின நிகழ்வுகள் இன்று(19.06.2026) இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வுகள் மாலை 5.30 மணியளவில் மன்னாரில் நடைபெற்றுள்ளது.

தமிழர் பகுதிகளில் 36வது தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு | 36Th Martyrs Day Observed

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (E.P.R.L.F) மன்னார் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பத்மநாபா மற்றும் உயிரிழந்த போராளிகளை நினைவு கூர்ந்து, சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், மன்னார் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன்,கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் உறுப்பினர்கள், மகளிர் அணியினர், உயிரிழந்த போராளிகளின் உறவுகள் என பலரும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.  

தமிழர் பகுதிகளில் 36வது தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு | 36Th Martyrs Day Observed

மேலதிக தகவல் - ஆஷிக்


மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US