மர்மமானமுறையில் உயிரிழந்த பாடசாலை மாணவன்!
அனுராதபுரத்தில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 15 வயதான பாடசாலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று பிற்பகல் குறித்த மாணவர் தனது வீட்டில் உள்ள அறையில் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படும் படுக்கையின் மேற்கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
4 சகோதர சகோதரிகள் உள்ள குடும்பத்தில் இளையவரான மாணவனின் உடலில் பல இடங்களில் கீறல் காயங்கள் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவன் மரணம்
பொலிஸார் நடத்திய சோதனையில், இறந்த மாணவனின் படுக்கையின் மெத்தையின் கீழ், போதைப்பொருள் வகை, தீப்பெட்டி,சிம் அட்டைகள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளுக்காக அவற்றை பொலிஸார் கொண்டு சென்றுள்ளனர்.
மரணம் தொடர்பான நீதவான் விசாரணையின் பின்னர், சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்யுமாறு பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இதன் காரணமாக சடலத்தை தம்புள்ளை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
