ராஜபக்சர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் ஆபத்து - ஆளும் தரப்பு விடுத்துள்ள எச்சரிக்கை
எதிர்காலத்தில் பல ராஜபக்சர்கள் நீதிமன்றங்கள், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு செல்ல வேண்டியிருக்கும் என ஆளும் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநுர அரசாங்கம் முன்னெடுத்து வரும் ஊழல் தடுப்பு மற்றும் குற்றவாளிகளைக் கண்டறியும் நடவடிக்கைகளில் எந்த விதமான தாமதமும் இல்லை என தொழில்துறை பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
பொசன் உற்சவ நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மோசடியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை
நாட்டில் ஊழல்வாதிகள் கைது செய்யப்படும் பணிகள் மந்தமாக நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எவ்வித தாமதமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்களுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri