நாட்டின் இறக்குமதி செலவினத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
உலக சந்தையில் ஏற்பட்ட எண்ணெய் விலை உயர்வின் காரணமாக, இந்த ஆண்டின் (2026) முதல் நான்கு மாதங்களில் நாட்டின் இறக்குமதி செலவினம் 25.2 சதவீதம் அதிகரித்து 8.2 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் எரிபொருள் இறக்குமதி செலவினம் 149.9 சதவீதம் கணிசமாக அதிகரித்து 886 மில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளது.
கணிசமாக சரிந்துள்ள நாணய மாற்று விகிதம்
இதன் விளைவாக, 2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஆண்டு (2025) இதே காலகட்டத்தில் 2.3 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நிலையில் , தற்போது 3.7 பில்லியன் அமெரிக்க டொலராக விரிவடைந்துள்ளது.

சமீபத்தில் நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், 2026 மே மாத இறுதி நிலவரப்படி, நடப்பு ஆண்டில் நாணய மாற்று விகிதம் 5.4 சதவீதம் கணிசமாக சரிந்துள்ளது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.