வெள்ளவத்தையில் உயிரிழந்த யாழ் பெண் : பொலிஸார் வெளியிட்ட தகவல்
கொழும்பு, வெள்ளவத்தை உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் 8வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வெள்ளவத்தை, தயா வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 49 வயதுடைய பிரேமிலா ஞானகணேசன் என்ற ஆசிரியையே உயிரிழந்துள்ளார்.
பம்பலப்பிட்டி ராமநாதன் இந்து கல்லூரியின் ஆசிரியை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
ஆசிரியை உயிரிழப்பு
உயிரிழந்த ஆசிரியை திருமணமான பெண் என்பதுடன் வர்த்தகரான அவரது கணவர் கடந்த 7ஆம் திகதி தனிப்பட்ட தேவைக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்தார். சம்பவத்தன்று இவரது மகன் வீட்டில் இருந்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் க.பொத. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவன் எனவும், வீட்டில் படித்துக் கொண்டிருந்தாத தெரிவிக்கப்படுகிறது.
ஆசிரியர் வீட்டில் இருந்த நாற்காலியை எடுத்துக்கொண்டு 8ஆம் மாடிக்கு சென்றுள்ளதாகவும் அங்கிருந்து ஏறி கீழே குதித்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
அதிர்ச்சியில் மகன்
உயர்தரப் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவன் தனது தாயின் மரணத்தினால் மிகவும் அதிர்ச்சியடைந்த நிலையில் இருந்த போதிலும் நேற்று நடைபெற்ற பரீட்சையில் பங்கேற்கச் செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரை மாய்த்துக் கொண்ட ஆசிரியை மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரை மாய்த்துக் கொண்ட ஆசிரியை உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி ஜனக கொடிகார விசாரணைகளை மேற்கொண்டார்.
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        